அமலாபாலை கையை பிடித்து இழுத்து ரசிகர்கள் ரகளை

அமலாபால் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் தயாராகிறது. சென்னையில் கடந்த வாரம் இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா நடந்தது. அவ்விழாவுக்கு அமலாபால் வரவில்லை.

பட விழாவை திட்டமிட்டு புறக்கணித்து விட்டதாக விமர்சனங்கள் கிளம்பின. இதனால் ஐதராபாத்தில் நடந்த இப்படத்தின் தெலுங்கு பாடல் வெளியீட்டு விழாவில் அமலாபால் பங்கேற்றார். ஏற்கனவே பேஜபாடா படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களிடம் பிரபலமாகி உள்ளார்.


தமிழில் அமலாபால் நடித்த படங்களும், தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு உள்ளன. இதனால் அமலாபாலை காணபடவிழா நடந்த அரங்கம் எதிரில் தெலுங்கு ரசிகர்கள் முண்டி நடித்தார்கள். விழா முடிந்து அமலாபால் வெளியே வந்த போது ஆட்டோ கிராப் வாங்குவது போல் சுற்றி வளைத்தனர்.

இதனால் கூட்டத்தில் அவர் சிக்கினார். சிலர் அமலாபாலின் கையை பிடித்து இழுத்து ரகளை செய்தனர். அவர் உடம்பில் நகக்கீறல்கள் பட்டு காயமும் ஏற்பட்டது. அவர்கள் பிடியில் இருந்து மீள முடியாமல் தவித்தார். அங்கு நின்ற பாதுகாவலர்கள் விரைந்து சென்று ரசிகர்கள் பிடியில் இருந்து அமலாபாலை கஷ்டப்பட்டு மீட்டு போலீஸ் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item