கருணா படுகொலை செய்து விடுவார் என்று அஞ்சிய தமிழ் பேசும் எம்.பிமார்!
https://besttamillnews.blogspot.com/2012/01/blog-post_29.html
கருணாவால் அரச உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்படக் கூடும் என்று பெரிதும் அஞ்சுகின்றார்கள் என தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முறைப்பாடுகள் செய்து இருக்கின்றனர்.
தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அச்சத்தை சிவில் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மனோ கணேசன் 2007 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி தூதரகத்துக்கு வெளிப்படுத்தி இருக்கின்றார்.
உயிராபத்தில் உள்ளார்களென தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தூதரகத்துக்கு தனிப்பட சொல்லி இருக்கின்றனர்.
கருணாவைப் பயன்படுத்தி அரசு தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களை படுகொலை செய்யக் கூடும் என்கிற அச்சம் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பரவலாக உள்ளது என சட்ட நிபுணரும் அரசியல்வாதியுமான கே. விக்னேஸ்வரன் என்பவரும் தூதரகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து இருக்கின்றார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு 2007 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல்கள் தமிழ். சி. என். என் இற்கு கிடைத்து உள்ளன.
