முத்துக்குமரா... உன் ஈகம் வீண் போகாது! - பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை

முத்துக்குமரா... 

நீ மூட்டிய தீ பற்றிப் படர்கின்றது!

உன் கனவுகள்

கல்லறைத் தமிழர்களையும்

தட்டி எழுப்புகின்றது!

சிங்களத்தின்மீது போர் தொடுக்க

தாய்த் தமிழகம் தயாராகிவிட்டது!

உன்னை எரித்த தீச் சுடரை

இதயத்தில் ஏந்திவிட்டார்கள்

உலகத் தமிழர்கள்!

உன் வார்த்தைகள் தமிழகத்தின்

ஆட்சியையே மாற்றிவிட்டது!

நீ கண்டது

ஊமைக் கனவல்ல...

உண்மையின் நிதர்சனம்!

ஈழத் தமிழர்களின் விடிவே

உலகத் தமிழர்களது அடையாளம் என்பதால்...

உன் ஈகம் இமயம்வரை

அறைந்து சொல்கின்றது

தமிழன் வீழமாட்டான் என்று!

முத்துக்குமரா...

ஈகப் பெருஞ்சுடரே!

உன்னைத் தொடர்ந்து எத்தனை

நெருப்பு மனிதர்கள்... செங்கொடி வரை?

உலகத் தமிழினம்

இனியும் உறக்கம் கொள்ளுமா?

முத்துக்குமரா...

தமிழீழம் மலரும்வரை

உன் நினைவுகளையும் ஏந்தியபடியே

போர்க் களம் செல்கின்றோம்!

முருகதாசன் திடலில்

உன்னையும் வணங்கியே

முரசறைவோம்!

மார்ச் ஐந்தில்...

புலம்பெயர் தமிழர்களது கண்களில்

அக்கினியாய் நீ இருப்பாய்!

முத்துக்குமரா...

உன்னால் முடியும்

எங்கள் தமிழர்களை

ஒன்றாக... ஒரே களத்தில் சேர்க்க

உன்னால் முடியும்!

எங்கள் போர்க்களத்தைச் சிதைக்கும்

கயவர்களை கருவறுக்க

உன்னால் முடியும்!

எழுந்து வா... மார்ச் ஐந்தில்

ஜெனிவா போர்க் களத்திற்கு!


- தமிழீழ மக்கள் பேரவை - பிரான்ஸ்

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item