போரில் புலிகள் வென்றபோதெல்லாம் வெடிகொளுத்தி தீபாவளி கொண்டாடிய தமிழர்கள்
https://besttamillnews.blogspot.com/2012/01/blog-post_1295.html
2001 ஆண்டு வக்கிலிக்ச்கு கிடைத்த தகவலே இதை உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை அரசை சமாளிக்க முடியாமல் புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்கு பின் வாங்கிய போதும் புலிகள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை காரணமாக புலிகளுடனேயே கணிசமான மக்கள் வன்னிக்கு சென்றதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலிகள் வன்னியில் நிலைகொண்டு அவர்களின் முதல் கட்ட மாபெரும் வெற்றிச்சமரான முல்லைத்தீவு சமரின் வெற்றியை வன்னி மக்கள் உட்பட அனைத்து தமிழ் மக்களும் தீபாவளி கொண்டாடுவது போன்று மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்,அந்த கொண்டாட்டம் ஜெயசிக்குறு முறியடிப்புச்சமர்,கிளிநொச்சி மீட்புச்சமர்,ஆனையிறவு பெரும் தளம் மீதான பெரும் சமர் வெற்றிகளின் போதெல்லாம் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த மக்கள் மட்டுமின்றி அனைத்து தமிழர்களுமே வெற்றிக்கொண்டாட்டங்களை கொண்டாடினர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
