சரத்பொன்சேகா - சம்பந்தன் இரகசிய உடன்பாடு!
https://besttamillnews.blogspot.com/2011/11/blog-post_4139.html
2010ம் ஆண்டு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இவ் இரகசிய ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ் உடன்படியின் போது ஏற்பட்ட இணக்கப்பாடு தொடர்பான ஆவணம் அமெரிக்கா உள்ளிட்ட சில நாட்டு தூதுவராலயங்களுக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில் அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டீனாஸிக்கு கிடைத்த பிரதியினை 01.01.2010ம் திகதி அன்று அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த விசேட இரகசிய குறிப்பில் தூதுவர் இந்தத் தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.
இந்த உடன்படிக்கையில் வடக்கு கிழக்கு இரண்டு பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில் மத்திய மற்றும் பிராந்திய அரசுகளுக்கு இடையில் தேசிய பாதுகாப்பு, நிதி, குடிவரவு போன்ற விடயங்கள் தவிர ஏனைய விடயங்களில் அதிகார பரவலாக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன
.
அத்துடன் வடக்குகிழக்கில் இராணுவமயத்தை இல்லாதொழித்தல், மீள்குடியேற்றம், முன்னாள் போராளிகளுக்கு உரிய புனர்வாழ்வளிப்பு, அவசரகால சட்டத்தை நீக்குதல், உட்பட்ட பல்வேறு உடன்பாடுகளும் இதில் அடங்கியிருந்தன.
தேர்தலுக்கு முன்னைய காலத்தில் சம்பந்தனுக்கும் அமெரிக்கத் தூதுவருக்கும் இடையில் பல தடவை சந்திப்புக்கள் நடைபெற்றுள்ளன. இடம்பெயர் மக்களை விடுவிப்பதனை தவிர ராஜபக்ஷ அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பெரிதாக எதனையும் செய்யவில்லை என சம்பந்தன் தெரிவித்ததாக புட்டீனாஸ் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகா வெற்றியீட்டக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதாக தெரிவித்திருந்தார். இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியதன் பின்னர், சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
