நாட்டை ஆட்டிப்படைக்கும் நவம்பர்




நவம்பர் மாதம் என்பது அனைத்து மக்களுக்கும் ஒரு வரபிரசாதமான மாதம். ஏனெனில் அந்த மாதம் வருணபகவான் மழையை வாரி வழங்கும் மாதம். அதனுடன்தான் விவசாயப் பெருமக்களின் அனைத்து விவசாய நடவடிக்கைகளும்



ஆரம்பிக்கப்படுகின்றது.

அந்த விவசாய மக்களின் வியர்வையில் நாம் எமது வயிற்றுப் பசியையும் போக்குகின்றோம்.

இது இவ்வாறிருக்க கார்த்திகை விளக்கீடும் இம் மாதத்தில் வருகை தந்து எமது நாட்டைப் பிரகாசிக்க வைக்கின்றது. எங்கும் ஒளிமயமான மாதமும் பயனுள்ள மாதமும்தான் இந்த நவம்பர் மாதம்.

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் ஏதோ வகையில் வலிமை பெற்றவர்கள் என்று சோதிடர்கள் கூறுகின்றார்கள். சோதிடர்களின் கருத்தை ஒரு புறத்தில் வைத்துக்கொண்டு நாம் கண் முன்பாக காணும் சிலரை பாருங்கள்.

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் 26. 11. 54 இல் பிறந்தவர். இலங்கை ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் 18. 11. 45 இல் பிறந்தவர். எதிரும் புதிருமான இந்த இருவரும் நவம்பர் மாதத்தில் பிறந்திருக்கிறார்கள்.

இதே போல் முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எவ் தளபதியும் ஈ.பி.டி.பி தலைவருமாகிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 10. 11. 57 இல் பிறந்தவர். விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதியும் அமைச்சருமான வினாயகமூர்த்தி முரளீதரன் என்னும் கருணா அம்மான் 07. 11. 66 இல் பிறந்தவர்.

வலிமை என்பதை நீதிக்காகவும் பயன் படுத்தலாம், அநீதிக்காகவும் பயன் படுத்தலாம்.

இலங்கையில் மட்டும் நவம்பரில் பிறந்தவர்கள்தான் வலிமை பெற்றவர்களாம்.
வே. பிரபாகரன், மகிந்தராஐபக்ச, டக்ளஸ் தேவானந்தா, கருணா...இந்த நால்வரில் யார் வலிமை பெற்றவர்கள்?

எனவே இவர்களில் யார் நல்வர்கள், யார் கெட்டவர்கள் என மக்கள் ஆகிய நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஆனால் நவம்பர் மாதம் ஒரு நல்ல மாதம் என்பதை மறந்து விடாதீர்கள்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item