வடக்கில் காணிப்பதிவு ஏன்? வடமாகாண காணிப்பதிவுத் திணைக்களம் விளக்கம்
https://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_6952.html
மேலை நாடுகளில் உள்ளதுபோல் அரசாங்கத்தின் பூரண உத்தரவாதமுடைய உரித்துச் சான்றிதழ்களை ஒவ்வொரு காணி உரிமையாளருக்கும் வழங்குவதே காணிப்பதிவு மேற்கொள்ளப்படுவதன் நோக்கம்.
1998ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட காணி உரித்துப் பதிவுச் சட்டத்தன்படி 2007ஆம் ஆண்டு முதன் முதலில் தென்னிலங்கையில் காணிப்பதிவு நடைபெற்றதாகவும், 2010ஆம் ஆண்டு தெற்கிலுள்ள 72 பிரதேசசபைகளில் இந்தப் பதிவுவேலை நடந்து முடிந்திருப்பதாகவும் வடமாகா காணித் திணைக்களத்தினர் குறிப்பிட்டனர்.
2011ஆம் ஆண்டு ஜனவரி 12இல் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வடக்கிலுள்ள 5 மாவட்டங்களுக்கும் இந்தக் காணிப்பதிவு விஸ்தரிக்கப்பட்டு வடமாகாணத்தில் மொத்தமுள்ள 34 சபைகளில் தெரிவுசெய்யப்பட்ட 4 பிரதேச சபைப் பகுதிகளிலேயே முதலில் காணிப்பதிவு ஆரம்ப்பிக்கப்பட்டுள்ளது என்று காணிப்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது.
பெரும்பாலான மக்களிடம் தற்போதுள்ள காணி உறுதிகள் ஆவணப் பதிவுச் சட்டத்தின் கீழ் ஆவணப்பதிவு செய்யப்படாதவை என்றும், மேலை நாடுகளில் உள்ளதுபோல் அரசாங்கத்தினுடைய பூரண உத்தரவாதமுடைய உரித்துச் சான்றிதழ்களை ஒவ்வொரு காணி உரிமையாளருக்கு வழங்குவதே காணிப் பதிவுகளின் நோக்கம் எனவும் காணிப் பதிவுத் திணைக்களத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
