தண்ணீர் துரவில் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தை பலி



மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெருகல் பிரதேசத்தில் ஒன்றரை வயதுடைய குழந்தையொன்று தண்ணீர் துரவில் வீழ்ந்து மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.
சின்னக்கல்லடி வெருகல் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் தனுகா என்ற பெண் குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

மேற்படி குழந்தை ஏனைய பிள்ளைகளுடன்; விளையாடிக்கொண்டிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலைக்கு பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item