தீபாவளியை முன்னிட்டு 300 முன்னாள் போராளிகளுக்கு விடுதலை



எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.


இதன்படி புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்றுவரும் 350 முன்னாள் போராளிகள் எதிர்வரும் தீபாவளித் தினத்தன்று விடுதலை செய்யப்படவுள்ளனர்.

இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்களை தவிர மொத்தம் 700 முன்னாள் போராளிகளே எதிர்காலத்தில் விடுதலைப் பெறவிருப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு தெரிவித்தார்.

இந்த 700 பேரில் சிலரை தடுத்து வைத்திருக்குமாறு நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இருந்தபோதும் அவர்களையும் விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அரச படைகள் புரிந் துவந்த யுத்தம் நிறைவுக்கு வந்தபோது சுமார் 11,000 வரையான புலி உறுப்பினர்கள் அரச படைகளிடம் சரணடைந்தனர்.

அவ்வாறு சரணடைந்தவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு பகுதி பகுதியாக விடுதலை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item