தொண்டர் ஆசிரியர்களை இணைத்துக் கொள்ளப்போவதில்லை – கல்வி அமைச்சு தெரிவிப்பு
https://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_20.html
பாடசாலைகளுக்கு தொண்டர் ஆசிரியர்கள் என எவரும் இனிவரும் காலங்களில் இணைத்துக் கொள்ளப்போவதில்லை என்று கல்வி அமைச்சு நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தது.
பாராளுமன்றம் நேற்றைய தினம் சபாநாயகர் சமல் ராஜபக்ச தலைமையில் கூடிய வேளையிலேயே இந்த அறிக்கை அறிவிக்கப்பட்டது.
வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. புத்திக்க பத்திரணவினால் கல்வியமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே பிரதிக் கல்வி அமைச்சர் விஜித்த விஜயனி சொய்சா மேற்கண்டவாறு தெவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், பாடசாலைகளுக்கு தகுதி வாய்ந்த ஆசியர்களை இணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பங்களில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படுகின்றது.
ஆகவே, தொண்டர் ஆசிரியர்கள் இவ்வாறு இணைத்துக் கொள்ளப்படும் போது ஆசிரியர் நியமனத்துக்கான அடிப்படைத் தகுதி தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது.
அடிப்படைத் தகுதியைக் கொண்டிராத தொண்டர் ஆசியர்களுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுவதில்லை.
ஏனெனில் ஆசிரியர்களுக்கான தகுதியற்றவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படுவதனால் அதில் நேரடியாக மாணவர்களே பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த காலங்களில் தொண்டர் ஆசிரியர்கள் இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்ட போதிலும் இனிவரும் காலங்களில் இதனை மேற்கொள்ள முடியாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அடிப்படை தகுதியில்லாத ஆசிரியர்களை தொண்டர் ஆரிசியர்களாக இணைத்துக் கொள்வது குறித்த பாடசாலைகளது அதிபர்களின் தவறாகும் எனத் தெரிவித்துள்ளார்.பாடசாலைகளுக்கு தொண்டர் ஆசிரியர்கள் என எவரும் இனிவரும் காலங்களில் இணைத்துக் கொள்ளப்போவதில்லை என்று கல்வி அமைச்சு நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தது.
பாராளுமன்றம் நேற்றைய தினம் சபாநாயகர் சமல் ராஜபக்ச தலைமையில் கூடிய வேளையிலேயே இந்த அறிக்கை அறிவிக்கப்பட்டது.
வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. புத்திக்க பத்திரணவினால் கல்வியமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே பிரதிக் கல்வி அமைச்சர் விஜித்த விஜயனி சொய்சா மேற்கண்டவாறு தெவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், பாடசாலைகளுக்கு தகுதி வாய்ந்த ஆசியர்களை இணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பங்களில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படுகின்றது.
ஆகவே, தொண்டர் ஆசிரியர்கள் இவ்வாறு இணைத்துக் கொள்ளப்படும் போது ஆசிரியர் நியமனத்துக்கான அடிப்படைத் தகுதி தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது.
அடிப்படைத் தகுதியைக் கொண்டிராத தொண்டர் ஆசியர்களுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுவதில்லை.
ஏனெனில் ஆசிரியர்களுக்கான தகுதியற்றவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படுவதனால் அதில் நேரடியாக மாணவர்களே பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த காலங்களில் தொண்டர் ஆசிரியர்கள் இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்ட போதிலும் இனிவரும் காலங்களில் இதனை மேற்கொள்ள முடியாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அடிப்படை தகுதியில்லாத ஆசிரியர்களை தொண்டர் ஆரிசியர்களாக இணைத்துக் கொள்வது குறித்த பாடசாலைகளது அதிபர்களின் தவறாகும் எனத் தெரிவித்துள்ளார்.