ஈரானின் நாசகார செயல் திருட்டுத்தனமாக தூக்கில் போடுகிறது


ஈரானில் உள்ள இஸ்லாமிய குடியரசு சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை இரகசியமான முறையில் தூக்கில் போட்டு எதிராளிகளின் கதையை கமுக்கமாக முடித்து வருவதாக இன்றைய ஐ.நா அறிக்கை தெரிவிக்கிறது. உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இவர்கள் செய்யும் மனித உரிமைப் படுகொலைகள் பெரும் அதிர்ச்சி தருவதாகவும் அது சுட்டிக்காட்டுகிறது. அந்த நாட்டில் கடந்த சில காலமாக இரகசியமாக கைதிகளை தூக்கிலிடும் கொடுமை அதிகரித்தபடி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் ஈரானில் உள்ள வகிலாபாத் சிறைக்கூடத்தில் 300 பேர் இரகசியமாக தூக்கிலிடப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. ஈரானில் இந்த ஆண்டு மட்டும்  வெளிப்படையாக 200 பேர் தூக்கில் போடப்பட்டுள்ளார்கள்.
கடந்த தை மாதம் மட்டும் 83 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளார்கள். சென்ற சில வாரங்களுக்கு முன்னர் 17 வயது சிறுவன் ஒருவனை சர்வதேச சட்டத்திற்கு முரணாக பொது மக்கள் முன்னால் தூக்கிலிட்டது ஈரானிய கொடுங்கோல் அரசு. திரைப்பட நடிகை ஒருவருக்கு ஆபாசமாக நடித்ததாகக் கூறி 90 கசையடிகள் போடும்படி நீதிமன்று ஒன்று தீர்ப்பு வழங்கியது. சென்ற மாதம் கார் ஓடிய குற்றத்திற்காக பெண்மணி ஒருவருக்கு பத்து கசையடிகள் போடும்படி தீர்ப்பு கூறியது. இப்படியாக இஸ்லாத்தின் பேரில் ஈரான் நடாத்தும் மனித உரிமை மீறல்கள் சர்வதேச சமுதாயத்தை அச்சுறுத்தும்படியாக நாளும் பொழுதும் உயர்வடைந்து வருகிறது. கடாபியின் படைகள் சிறைப்பிடித்த பல போராட்டக்காரரை தூக்கில் போட்டு கொன்று புதைத்துள்ளமை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அம்பலமானது தெரிந்ததே. இன்று உலகில் உள்ள ஒரு சில மோசமான அரசுகள் ஐ.நாவுக்கு பெரும் தலைவலியாக மாறிவருகின்றன.
இதேபோல இலங்கை வன்னியில் சரணடைந்த புலிகளின் லோரன்ஸ் திலகர், புதுவை இரத்தினதுரை, எழிலன், பாலகுமார், யோகி போன்றவர்களுடைய தகவல் மிக இரகசியமாக இருக்கிறது. இவர்கள் குறித்த அறிக்கைகளும் ஐ.நாவால் வெளியிடப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item