விஜய் படத்தின் புதிய தயாரிப்பாளர்!
https://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_1141.html
வரும், ஆனா வராது என்ற வடிவேலு காமெடி, யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, விஜய் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு பொருந்தும். காரணம் இப்போதெல்லாம் விஜய் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களோடு விஜயின் அப்பாவும் இணைந்து கொள்கிறாராம்!
நண்பன் படத்தைத் தொடர்ந்து அடுத்து விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படத்தை வேலாயுதம் படத்தைத் தயாரித்த ஆஸ்கார் ரவிச்சந்திரனே மீண்டும் தயாரிக்கிறார். அவருடன் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரரும் பங்குதாரராம். ஆனால், படத்தில் தயாரிப்பு ஆஸ்கார் வி.ரவிச்சந்திரன் என்று மட்டுமே வரும். எஸ்.ஏ.சந்திரசேகரின் பெயர் வராதாம்!
முருகதாஸ் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை இயக்குனர் விஜய் இயக்கப்போகிறார். இந்தப் படத்தை சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரிக்கிறார். அதாவது விஜய் படத்தை இவர் முதல்முறையாக தயாரிக்கிறார். அவருடன் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனும் பங்குதாரர். இந்தப் படத்திலும் தயாரிப்பு சந்திர பிரகாஷ் ஜெயின் பெயர் மட்டுமே வருமாம். எஸ்.ஏ.சந்திரசேகரன் பெயர் வராது என்கிறார்கள்! வரும் ஆனா வராது!
