உலகெங்கும் கிறிஸ்துமஸ் உற்சாக கொண்டாட்டம் (Photos)

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன.

பெத்லஹேமில் இயேசு பிறந்த வரலாற்றை குறிக்கும் கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு, வாடிகன் சிட்டியில் உள்ள புனித பேராலயத்தில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

இரண்டரை மணி நேரம் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டு போப் பிரான்சிஸ் அனைவரையும் வாழ்த்தினார்.

தமிழகத்தின் பல்வேறு தேவாலயங்களிலும், நள்ளிரவு கூட்டுப் பிரார்த்தனையும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.

சென்னை சாந்தோம் புனித தோமையர் பேராலயம், பெசன்ட்நகரில் உள்ள அன்னை வேளாங்கன்னி ஆலயத்தில், நடந்த பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆலயங்கள் இரவிலும் மிளிர்ந்தது.

கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடும் விதமாக கிறிஸ்தவர்கள் கேக் வெட்டி, மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

இதேபோல், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம், தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம், ஐராவதநல்லூரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் பேராலயம், சேலம் குழந்தை ஏசு பேராலயம் உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள எல்லா தேவாலயங்களிலும் கூட்டுப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள கப்ஸ் தேவாலயத்தில், 3 மொழிகளில் சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர்.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சோனாகலி பகுதியில், ராணுவ வீரர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர், வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து இனிப்புகளை வழங்கினார்.


















Related

செய்தி 6353323006353517030

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item