சுவாரசியமான சில தகவல்கள்

நீங்கள் அறிந்திராத சில சுவாரசியமான தகவல்கள். அமேரிக்க சுதந்திரதேவி சிலையின் ஆட்காட்டி விரல் நீளம் 8 அடி. சிலியிலிருக்கும் அட்டகாமா பாலைவனத்தின் சில பகுதிகளில் இன்றைவரை மழை பெய்ததற்கான பதிவுகளே இல்லை. 75 வயதுடைய மனிதனொருவன் தன் வாழ்நாளில் 23 ஆண்டுகள் உறக்கத்தில் கழித்திருப்பான். சிலவகையான பாடும் பறவையின் நிறை ஒரு சதத்திலும் குறைவானது. எமது கண்விழி ஒரு அவுண்ஸ் எடையுடையது. நாம் சாதாரணமாக சிரிக்கும் போது 14 தசைகளும், சிரிக்காமல் இருக்கையில் 43 தசைகளும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நீல திமிங்கிலத்தின் நாக்கு, ஒரு யானையிலும் எடைகூடியது.

எமது உடலில் 2-3 மில்லியன் வியர்வை சுரப்பிகள் உள்ளன. எம்மில் 2 பில்லியனில் ஒருவர் 116 வயதை தாண்டி வாழ்கிறார். தொடர்ச்சியாக அளவுக்கதிகமான கரட் சாப்பிட்டோமானால் , கரட் நிறத்திற்கே மாறிவிடும் சந்தர்ப்பம் உண்டு. .சுறாக்கள் 100 வருடங்கள் வரை உயிர் வாழும் ஆற்றலுடையவை. நுளம்புகள் ஏனைய நிறங்களை காட்டிலும் ,நீல நிறத்தால் அதிகம் கவரப்படுகின்றன. கங்காரு விலங்கினால், பின்னோக்கி நடக்க முடியாது. மனிதனை தவிர கையில் ரேகை அடையாளம் உடைய ஒரே விலங்கினம் கோலாக் கரடிகள் மாத்திரமே. -

Related

Uncategorized 5314755711666803075

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item