சர்வதேச மன்னிப்புச் சபைக்கு புலிகள் நிதி உதவிகளை வழங்குகின்றனராம் –அரசாங்கம்

http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_9997.html

சர்வதேச மன்னிப்புச் சபை கனேடிய தமிழ் காங்கிரஸிடமிருந்து 50000டொலர்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் குற்றச்செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் குரல் கொடுத்து வரும் ஒர் அமைப்பு, புலி ஆதரவுஅமைப்பிடம் எவ்வாறு பணம் பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென கனேடிய தமிழ் காங்கிரஸ் கோரி வருவதாகசுட்டிக்காட்டப்படுகிறது.
அண்மையில் கனடாவில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் திரட்டப்பட்ட நிதி இவ்வாறு சர்வதேச மன்னிப்புச் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபையன் தலைமைக்காரியாலயத்தில் முறைப்பாடு செய்ய இலங்கை அரசாங்கம் உத்தேசித்துள்ளதாம்.