ஆசை வார்த்தைகள் கூறி, உறவு கொண்டார் !!

http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_594.html

காரைக்குடியைச் சேர்ந்த பெண்ணை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில், செஷன்ஸ் கோர்ட் விசாரிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
காரைக்குடி பாண்டிச்செல்வி தாக்கல் செய்த மனு:
எனக்கும், அதே பகுதியை சேர்ந்த நாச்சியப்பனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. என்னை திருமணம் செய்துகொள்வதாக, நாச்சியப்பன் ஆசை வார்த்தைகள் கூறி, உறவு கொண்டார். திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியபோது, நாச்சியப்பன் மறுத்தார்.
"கூத்தகுடி' சண்முகம் (முன்னாள் எம்.எல்.ஏ.,) மிரட்டினார். கூத்தகுடி சண்முகம், நாச்சியப்பன் மீது காரைக்குடி மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியதாக நாச்சியப்பன் மீது பதிவான வழக்கை ரத்து செய்து, மானபங்க வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி காரைக்குடி ஜே.எம்.,கோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். கோர்ட் தள்ளுபடி செய்தது. அதை ரத்து செய்து மானபங்க வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.இம்மனு நீதிபதி பி.ஆர்.சிவகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் கார்த்திக் கண்ணன் ஆஜரானார். நீதிபதி, "காரைக்குடி கோர்ட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. செஷன்ஸ் கோர்ட் விசாரிக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.