மீண்டும் ரஜினியை இயக்குகிறார் ஷங்கர்!!
https://besttamillnews.blogspot.com/2013/12/blog-post_3599.html
ஐ படத்தின் பணிகள் முடியும் தருவாயில் இருக்கிறது. அதேப்போல் ரஜினியின் கோச்சடையானும் அதே நிலையில் இருக்கிறது. இரண்டு படங்களுமே ஒரு மாத இடைவெளியில் ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 12ந் தேதி ரஜியின் பிறந்த நாளைக்கு ஷங்கர் வாழ்த்து சொல்லியிருக்கிறார். அப்போது ரஜினி, "ஐக்கு பிறகு என்ன செய்ய இருக்கிறீர்கள்?" என்று கேட்டிருக்கிறார். "இப்போதைக்கு எதுவும் ஐடியா இல்லை" என்று ஷங்கர் கூறியிருக்கிறார். "நாம் இருவரும் மீண்டும் சேர்ந்து பணியாற்றலாமா?" என்று ரஜினி கேட்க ஷங்கரும் ஓகே சொல்லிவிட்டாராம்.
"அமைதியா, ஜாலியா நடிச்சு ரொம்ப நாளாச்சு. பெருசா ஆக்ஷன் இல்லாம ஜாலியா இருக்குற மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் பண்ணுங்களேன்"னு ரஜினி கேட்க. அதற்கும் ஷங்கர் ஒப்புக் கொண்டிருக்கிறார். இருவரும் இணையும் படம் ஒரு குறுகியகால தயாரிப்பாகவும், அதே நேரத்தில் பிரமாண்டமாகவும் இருக்கும் என்கிறார்கள். எத்தனை கோடி பட்ஜெட்டாக இருந்தாலும் எங்களுக்கு ஓகேதான் என்று சொல்லியிருக்கிறது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.