இந்த அமலா பால் இம்சை தாங்க முடியலடா சாமி -- அலுத்துக்கொண்ட பிரபல டிவி நிறுவனம் (சுவாரசியமான சம்பவம்)

மிகப்பெரிய சேனல் அது. அங்கேயிருக்கிற ஒவ்வொரு இஞ்ச்-ம் கூட லேட்டஸ்ட் தொழில் நுட்பத்தை உள்ளடக்கியது. பிரதமரே வந்தால் கூட தனது காரை 100 மீட்டர் தூரம் தள்ளி நிறுத்திவிட்டுதான் வாசல் வரைக்கும் நடந்து செல்ல வேண்டும் என்பதெல்லாம் ரூல்! 

இந்த சேனலுக்கு நேரடி பேட்டியளிக்க போன அமலா பால் செய்த அலட்டல்களை பற்றிதான் இப்போது கதை கதையாக கதைக்கிறது கோடம்பாக்கம். அப்படியென்ன செய்துவிட்டாராம் அவர்? 

ம்ஹூம்... என் கார் வாசல் வரைக்கும் போய் நின்றால்தான் காரை விட்டே இறங்குவேன் என்று கூறிவிட்டாராம். எம்.டியை தவிர யார் காரும் அது வரைக்கும் போகாதும்மா. ப்ளீஸ் என்று கெஞ்சிய சேனல் நிருபரை, போய்யா லுசு என்பது போலவே ட்ரீட் பண்ணிய அமலா, காரைவிட்டு இறங்கவே இல்லையாம் கடைசிவரைக்கும். 

அப்புறம் சேனல் மேனேஜர், செக்யூரிடி ஆபிசர் என்று ஒவ்வொரு டேபிளுக்காய் ஓடி அமலா வந்த காரை வாசல் வரைக்கும் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தாராம் சேனல் நிருபர். அப்புறம் என்ன. சட்டென்று இறங்கி பட்டென்று உள்ளே செல்ல வேண்டியதுதானே? வாசலுக்கு நேராக காரை நிறுத்திக் கொண்ட அமலா, இருங்க பசிக்குது. ஒரு பர்கரை முழுங்கிட்டு வர்றேன் என்று காருக்குள்ளேயே இருந்து காலை பசியை தீர்க்க, அடி வயிறெல்லாம் கலங்கிப் போனாராம் நிருபர். 

இந்த நேரத்தில் எம்.டி வந்தால் வேலைக்கு உலைதான் என்று மனசெல்லாம் இடி இடிக்க, மேடம் சீக்கிரம் என்று கெஞ்சிக் கொண்டேயிருந்தாராம் அவர். அந்த சேனலின் ஒட்டுமொத்த செக்யூரிடி டீமும் ஓடி வந்து சீக்கிரம் சீக்கிரம் என்று பதறியும், ஆற அமரதான் வயிற்றுக்குள் போனதாம் அந்த ஒன்றரையணா பர்கர். 

சேனலை விட்டு அமலா கிளம்பும் வரைக்கும் இந்த பீதி நீடித்ததாக தெரிவிக்கிறது கோடம்பாக்கத்தின் அக்கப்போர் நியூஸ் பீரோ!

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item