இலங்கை பாரியளவிலான போராட்டங்களை சந்திக்க நேரிடலாம் !

நாட்டில் பாரியளவில் தொடர் போராட்டங்கள் இடம்பெறக் கூடிய அபாயம் காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எரிபொருள் விலையேற்றம் மற்றும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு போராட்டம் நடத்தப்பட உள்ளது. சிலாபத்தில் நடைபெற்ற மீனவர் போராட்டத்தை விடவும் மோசமானதாக இந்தப் போராட்டங்கள் அமையக் கூடும் என புலனாய்வுப் பிரிவினர், பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்துள்ளனர்.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி பொருட்கள் சேவைகளின் விலையேற்றத்திற்கு வழி கோலும் எனவும் இதனால் மக்கள் கடும் அதிருப்தி அடையக் கூடிய நிலைமை ஏற்படும் எனவும் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.கட்சி பேதமின்றி மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item