இளவயதில் செக்ஸ் வைத்துக் கொள்வது எதிர்காலத்தில், நரம்பு மண்டலத்தை பாதிக்கும்?


இளம் வயதில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது எதிர்காலத்தில் மூளை செயல்பாடுகள், நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். டீன்ஏஜில் செக்ஸ் வைத்துக் கொள்ளும் கலாசாரம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக அமெரிக்காவின் ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பிறந்து 40 நாட்கள் ஆன பெருச்சாளிகளை வைத்து ஆய்வு நடத்தினர். நன்கு வளர்ந்தவை, மீடியம் வயதில் இருப்பவை, இளம் எலிகள் என மூன்றாக பிரிக்கப்பட்டன.
செக்ஸ் உணர்வை தூண்டும் ஊசி போட்டு சோதனை நடத்தப்பட்டது. பின்னர், எலிகளிடம் மருத்துவ ரீதியாக ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ஆராயப்பட்டன.
இதுபற்றி விஞ்ஞானிகள் கூறியதாவது:
மற்ற பிரிவுகளுடன் ஒப்பிடும்போது இளம் வயது எலிகளின் செயல்பாடுகள் செக்ஸ் உறவுக்கு பிறகு பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. அவற்றின் அன்றாட செயல்பாடுகளில் சுணக்கம், சோர்வு காணப்பட்டது. நரம்பு மற்றும் மூளை செயல்களும் பாதிக்கப்பட்டிருந்தன.
அன்றாட உணவைக்கூட உண்ணாமல் ஒரே இடத்தில் முடங்கி கிடந்தது. சரியான பருவத்தில் இருந்த எலிகள் வழக்கம்போல இருந்தன.
இளம் பருவத்தில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது மூளை, நரம்புமண்டல வளர்ச்சியை பாதிக்கும் என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதியாக தெரிகிறது. மனிதர்களுக்கும் இது பொருந்தும். இதன் பாதிப்பு உடனடியாக இருக்காது என்றாலும் எதிர்காலத்தில் அதிகரிக்கும்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item