கல்லூரி வளாகத்தில் பெண் கொலை நள்ளிரவில் வாலிபர் பிடிபட்டார்
https://besttamillnews.blogspot.com/2012/01/blog-post_8409.html
கூடுவாஞ்சேரி : வண்டலூர் கல்லூரி வளாகத்தில் நடந்த பெண் கொலை வழக்கில் வாலிபரை நேற்று நள்ளிரவு போலீசார் கைது செய்தனர்.வண்டலூர் உயிரியல் பூங்கா அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாணவி சர்மிதாவின் தாய் தவ்ஹீத் நிஷா (39) நேற்று மதியம் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். சடலத்தை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகளின் காதலுக்கு தடை போட்டதால் காதலன் சந்தானம் அவரை குத்தி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
காஞ்சிபுரம் எஸ்பி மனோகரன் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு டிஎஸ்பி தணிகாசலம், கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், ஓட்டேரி எஸ்.ஐ. ரகுநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கல்லூரி வளாகத்தில் கிடந்த செல்போனை கைப்பற்றி துப்பு துலக்கினர். கொலை நடந்த 12 மணி நேரத்தில் அசோக் நகரில் பதுங்கி இருந்த சந்தானத்தை (19) நேற்று நள்ளிரவு போலீசார் கைது செய்தனர்.
மறைமலைநகர் போலீஸ் நிலையத்துக்கு சந்தானத்தை அழைத்து சென்று விசாரித்தனர். அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள பாலிடெக்னிக்கில் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிப்ளமோ படித்துள்ளார். வண்டலூர் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தபோது சர்மிதாவுக்கும், சந்தானத்துக்கும் காதல் மலர்ந்துள்ளது.
கடந்த 19ம் தேதி பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் சர்மிதா வீட்டுக்கு சந்தானம் சென்று பெண் கேட்டுள்ளார். இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் திருமணத்துக்கு உறவினர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்று கூறி தவ்ஹீத் நிஷா பெண் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தானம் அவரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. சர்மிதாவிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.