இறுதி யுத்தத்தில் சிங்கள ராணுவத்தை எதிர்கொண்ட புலிகளின் தளபதிகளின் பிள்ளைகள்.

எவராலும் அசைக்க முடியாத பலத்துடன் இருந்த புலிகளை அழிப்பதற்கு பல நாடுகளின் உதவியுடன் போர் விதி முறைகளை மீறி,தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வீசி பல ஆயிரம் மக்களையும் பலியெடுத்து புலிகளின் நிலைகளை அழித்து தமிழீழத்தை முழுமையான தனது கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவருவதற்கு சிங்கள ராணுவத்தினர் படாத பாடு பட்டு போரிட்டு கொண்டிருந்த போது அதை சமாளிப்பதற்காக புலிகள் தமது ஆள் பலத்தை அதிகரிப்பதற்காக குடும்பத்தில் ஒருவர் என்ற றீதியில் ஆள்சேர்ப்பில் ஈடுபட்டிருந்தனர் என்பது அப்போது வெளிவந்த செய்தி.

குடும்பத்தில் ஒருவர் என்ற வகையில் இயக்கத்தில் சேர்க்கப்பட்ட போது புலிகளின் தளபதிகளின் மூத்த பிள்ளைகளும் இயக்கத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர் என்றும் தலைவர் அவர்களின் மூன்று பிள்ளைகளில் இரு மூத்தவர்கள் எதிரிக்கு எதிராக களத்தில் வீச்சுடன் போரிட்டதாகவும் புலிகளின் கட்டளைத்தளபதிகளில் ஒருவராக சொர்ணம் அவர்களின் மூத்த மகளும் எதிரிக்கு எதிராக களத்தில் போரிட்டதாகவும் வக்கிலிக்ச் மூலம் உயர்வுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இன்னும் பல தளபதிகளின் பிள்ளைகளும் சிங்கள ராணுவத்திற்கு எதிராக களமிட்டிருந்த போதும் அவர்களின் பெயர்களை  அவர்களின் பாதுகாப்பு கருதி தனிக்கை செய்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item