MS- Word Documentல் எளிதாக வாட்டர்மார்க் சேர்க்க!






உங்களிடம் MS-ஆபிஸ் பதிப்பு 2007 அல்லது 2010 இருப்பின் திறந்து கொள்ளவும். ஏற்கனவே தட்டச்சிட்ட அல்ல புதியதாக தட்டச்சிடுகிற கோப்புகளிலும் வாட்டர்மார்க் இடமுடியும்.





ரிப்பன் மெனுவில் Page Layout என்பதைக் கிளிக் செய்தால் Watermark என்ற மெனு தெரியும். அதைக் கிளிக் செய்தால் கீழ்க்கண்டவாறு வசதிகள் தோன்றும். 
1. No Watermark — வாட்டர்மார்க் தேவையில்லை என்பதற்காக,


2. Picture Watermark — உங்களிடம் இருக்கும் புகைப்படம் அல்லது ஒளிப்படங்களை வாட்டர்மார்க் ஆகப் பயன்படுத்துவதற்கு,


3. Text Watermark — இதில் உங்களுக்குத் தேவையான பெயர் அல்லது சொற்களை வாட்டர்மார்க் ஆக இணைக்கலாம்.




மேலும் இதிலுள்ள வசதிகள்: இதில் ஃபாண்ட் அளவு, வண்ணம் போன்றவற்றையும் அமைக்கலாம். வாட்டர்மார்க் ஆவணத்தின் குறுக்காக அல்லது கிடைமட்டமாக வர Layout இல் Diagonal or Horizontal என்பதில் தேர்வு செய்து கொள்ளலாம். வேர்ட் டாகுமெண்ட்களில் வாட்டர்மார்க் எளிமையாகவும் விரைவாகவும் இதன் மூலம் கொண்டு வரலாம். 
MS-Word 2003 மற்றும் பழைய பதிப்புகளில் வாட்டர்மார்க் சேர்க்க: மெனுபாரில்Format->Background என்பதில் சென்று Printed Watermark என்ற மெனுவைக் கிளிக் செய்தால் மேற்கண்ட வசதிகள் இதிலும் கிடைக்கும்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item