கட்டாயத்தின் பேரில் கருத்துக் கூறுகின்றாரா கடத்தப்பட்ட மாணவன்?




யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவத்துறை மாணவன் வேதரணியம் லத்தீஸ், தான் இலங்கை இராணுவத்தாலோ அல்லது பொலிஸாரினாலோ கடத்தப்படவில்லை எனவும், தான் கடத்தப்பட்ட உண்மை எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இராணுவத்தையும் பொலிஸாரையும் தவிர கடத்துவதற்கும் யாரும் இல்லையா? அரச அருவடிகள் இதனைச் செய்திருக்க வாய்ப்பில்லை? என்ற பலதரப்பட்ட கேள்விகள் முன் வைக்கப்பட்டாலும் கூட, இவ்வாறு ஊடகத்துக்குக் கருத்துத் தெரிவிக்குமாறு மேற்படி மாணவன் கட்டாயப்படுத்தப்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மையாகப் புலப்படுகின்றது. 


அதாவது தான் கடத்தப்பட்டது உண்மை எனக் கூறும் மாணவன், இராணுவமும் பொலிசும் தன்னைக் கடத்தவில்லை எனச் சுட்டிக்காட்டிக் கூறுவது அவர்களே கடத்தியவர்கள் என்பதை ஊகித்துக் கொள்ளக் கூடியதாகவிருக்கின்றது.







அதிலும் தான் யாருடைய கட்டாயத்தின் பேரில் இத் தகவலை வெளியிடவில்லை எனக் கூறியிருக்கின்றார் இம் மாணவன். ஊடகம் ஒன்றுக்கு வழங்கும் பேட்டியில், இவ்வாறான தகவல்கள் இடம்பெறுவது அநாவசியமான ஒன்று. மாறாக அச்சுறுத்தலுக்கு மத்தியில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கே இறுதியில் மேற்படி வசனங்கள் வருவது வழமை.







இதைவிட நீதிமன்றத்தில் பகவத் கீதைக்கு மேல் கையை வைத்துக் கொண்டு நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை என அனைத்துப் பொய்களையும் கூறும் குற்றவாளி போன்று, நான் கடத்தப்பட்டது உண்மை,







ஆனால் கடத்திவர்கள் யார் என்பது தெரியாது, அத்துடன் இராணுவமோ அல்லது பொலிஸாரோ என்னைக் கடத்தவில்லை எனவும், ஊடகங்கள் வெளியிட்டது அவர்களது கற்பனை என்றும் தெரிவித்துள்ள மேற்படி மாணவன், இராணுவமும் பொலிஸாரும் கடத்தியதாக நான் தெரிவிக்கவில்லை எனக் கூறும் மாணவன், இனிமேல் இராணுவமும் பொலிஸாரும் கடத்தியதாக எந்தவிதக் கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் என முன்னுக்குப் பின் முரணாகக் கருத்துத் தெரிவிக்கப்பட்டிருப்பது பதற்றத்தினதும், அச்சுறுத்தலினதும் உச்சக் கட்டமே தவிர வேறு எதுவும் கிடையாது.







இதேவேளை பலாலி ஊடகத்துறையிலிருந்து இம் மாணவனின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே இதிலிருந்து யாழ்.







பல்கலைக்கழக மாணவனைக் கடத்தியது இராணுவம் அல்லது பொலிஸ் என்பது தெரிகின்றது. மாறாக அச்சுறுத்தலுக்கு அடிபணிந்தே மாணவன் மேற்படி கருத்துக்களை வெளியிட்டிருப்பதும் தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது.


Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item