எச்.பி. இன் 'புரஜெக்ட் மூன்சொட்': புரட்சிகரத் திட்டம் _
https://besttamillnews.blogspot.com/2011/11/blog-post_5914.html
சேர்வர்கள் இணைய நிறுவனங்களின் முதுகெலும்பு எனக் கருதப்படுகின்றது. இதனாலேயே இணைய நிறுவனங்கள் இவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. எனினும் சேர்வர்கள் இயங்குவதற்கு அதிகமான மின்சக்தி பயன்படுத்தப்படுகின்றது.
இணைய நிறுவனங்கள் முகங்கொடுக்கும் மிகப்பிரதான பிரச்சினையாக இதைக்கருதலாம்.
சேர்வர்களின் அதீத மின்பாவனை காரணமாக இந்நிறுவனங்கள் பாரிய செலவினத்திற்கு முகங்கொடுத்துள்ளன.
இப்பிரச்சினையைக் குறைக்கும் முகமாகவும், சேர்வர் சந்தையில் இன்டெல் நிறுவனத்தின் ஆதிக்கத்தினைக் குறைக்கும் முகமாகவும், மிக முக்கியமான திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளதாக எச்.பி. அறிவித்துள்ளது.
இத்திட்டத்திற்கு 'புரஜெக்ட் மூன்சொட்' எனப் பெயரிட்டுள்ளது ஹெவ்லட் பெக்கார்ட்.
குறைந்த மின்சாரத்தை உபயோகப்படுத்தி குறைந்த இடப்பரப்பில் இயங்கக்கூடிய சேர்வர்களை இதன் மூலம் எச்.பி. உருவாக்கவுள்ளது.
சிப் உருவாக்குநர்களான ஏ.ஆர்.எம். மற்றும் எட்வான்ஸ் மைக்ரோ டிவைஸ் நிறுவனங்களுடன் இணைந்தே இப்புரட்சிகரத்திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளது.
ஏ.ஆர்.எம். தொழில்நுட்பத்தினை உபயோகப்படுத்தித் தயாரிக்கப்படும் சிப்களே அவற்றின் குறைந்த சக்திப் பாவனையைக் கருத்தில் கொண்டு அதிகமான டெப்லட் மற்றும் ஸ்மார்ட் போன்களில் உபயோகப்படுத்தப்படுகின்றன.
மேலும் எதிர்காலத்தில் சேர்வர் உற்பத்தியிலும் ஏ.ஆர்.எம். இணையவுள்ளது.
