இரண்டு பவுணை விழுங்கியவர் வைத்தியசாலையிலிருந்து தலைமறைவு!! (படங்கள் இணைப்பு)



இரண்டு பவுண் தங்கத்தை உட்கொண்ட சம்பவமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
தான் வீட்டில் பகல் நேரத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில் தங்க அட்டியலை வாயினுள் போட்டு உமிழ்ந்து கொண்டிருந்த சந்தர்பத்தில் விழுங்கியதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.

அதனையடுத்து பாதிக்கப்பட்டவரை எக்ஸ்ரே படம் எடுத்த வேளையில் தான் விழுங்கிய நகையை படத்தில் காண்பித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட வந்தவர்கள் விசாரணைகளை செய்த வேளை வைத்தியசாலையை விட்டு, தாதியர்களுக்கும் சொல்லாமல் தலைமறைவாகியுள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தங்க நகையை விழுங்கியவர் கிண்ணியா, துறையடி, சின்னம்பிள்ளைச்சேளைப் பகுதியைச்சேர்ந்த வீசாவுல் ஹமீட்(வயது-35) என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வைத்தியசாலைக்கு தனது வீட்டு முகவரியைத் தவறாக வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு பவுணை விழுங்கியவர் வைத்தியசாலையிலிருந்து தலைமறைவு!! (படங்கள் இணைப்பு)



Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item