தரம் 5 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை அதிபர் கைது
https://besttamillnews.blogspot.com/2011/11/5.html
தனது பாடசாலையில் கல்வி கற்கும் இரு சிறு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாடடில் பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம் – மாதம்பை பிரதேச முஸ்லிம் பாடசாலை ஒன்றின் அதிபரே நேற்று சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட இரு மாணவிகளும் 5ம் தரத்தில் கல்விப் பயில்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இரு மாணவிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரும் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
