வெடி கொளுத்திய சிறுவர்கள் மீது காற்றடிக்கும் பம்மினால் தாக்குதல்!!
https://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_9075.html
தீபாவளித்தினமான நேற்றுப் பலர் தமது வீடுகளில் பட்டாசு கொளுத்தி தீபாவளியைக் கொண்டாடினர். மாதகலில் வீடொன் றில் இவ்வாறு பட்டாசு கொளுத்தி கொண்டாடிக் கொண்டிருந்த போது பட்டாசு ஒன்று பக்கத்து வீட்டு வளவினுள் சென்று வெடித் தது.
இதனால் கோபமடைந்த பக்கத்து வீட்டுக்காரர் பட்டாசு கொளுத்திய இரண்டு பேரையும் பிடித்து காற்றடிக்கும் "பம்' மூலம் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் பிரதான வீதி, மாதகலில் நேற்றுக் காலை 7.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் இதே இடத்தைச் சேர்ந்த அ.ராகுலன்(வயது18), அ.நவநீதன்(வயது9) ஆகியோரே தலையிலும்,உடம்பிலும்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
