அகதி அந்தஸ்துக் கோரிய இலங்கையர் தற்கொலை!

அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்த்து கோரி தஞ்சம் புகுந்த இலங்கை பிரஜை ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்து வைபவம் ஒன்றில் பங்குபற்ற தனக்கு அனுமதி மறுக்கப்பட்டமை அடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு சிட்னியில் உள்ள வில்லாவூட் அகதிகள் முகாமில் நேற்று நள்ளிரவுக்குப் பின்னரான நேரத்தில் இவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விஷம் அருந்தியவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அம்பூலன்ஸ் வண்டியின் உதவி பெறப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவருடைய மரணம் குறித்து அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item