நீங்கள் நடக்க நடக்க மின்சாரம் பிறக்கும் : அறிந்து கொள்ளுங்கள்!!
https://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_6234.html
-
-
சாலை ஓரங்களில் பதிக்கப்படும் இந்த Tiles கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 2 . 1 வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு அந்த மின்சாரத்தை சாலை ஓரங்களில் இருக்கும் விளக்குகளுக்கு பயன்படுத்தலாம் என சொல்லுகிறார் இவர். 100 சதவீத மறு சுழற்சி செய்ய முடிகிற மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த Tiles 5 வருடங்களுக்கு கிட்ட தட்ட 20 மில்லியன் மிதிகளை ( நமது அடிகள் ) வாங்கி கொள்ளும் சக்தி படைத்தது. இந்த மின்சாரத்தை சிறிய லித்தியம் பாட்டரிகளில் சேமிக்கவும் முடியும் என்பது கூடுதல் தகவல்.தற்பொழுது கிழக்கு லண்டனில் சோதனையில் இருக்கும் இந்த கண்டுபிடிப்பு 2012 ல் லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் போது ஒலிம்பிக் மைதானத்தையும் Westfield Stratford City ஷாப்பிங் பகுதியையும் இணைக்கும் சாலை பகுதியில் பொருத்தப்படும் என தெரிகிறது.
