யாழ்ப்பாண மாம்பழத்தில் மயங்கிய அமெ.எம்பிக்கள் அரச அதிபரிடம் மாம்பழம் கேட்டனர்!!
https://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_4867.html
யாழ்ப்பாணத்தின் மாம்பழச் சுவைக்கு மயங்கிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாணத்தில் எங்கே மாம்பழங்கள் வாங்கலாம் என்று அரச அதிபர் இமெல்டா சுகுமாரிடம் கேட்டனர்.யாழ்.மாவட்டசெயலகத்துக்கு நேற்றுமுன்தினம் காலைவிஜயம் செய்த அமெரிக்கக் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே அரச அதிபரிடம் இவ்வாறு மாம்பழம் கேட்டனர்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
யாழ்.மாவட்டத்தில் சுற்றுலாத்துறை தொடர்பாகவும் பார்க்க வேண்டிய இடங்கள் தொடர்பாகவும் மாவட்ட செயலகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நூலை விருப்பத்துடன் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாங்கிப்படித்தனர்.பின்னர் யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பாகவும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசாரித்தனர். அதன் தற்போதைய நிலையை அரச அதிபர் படத்தில் காட்டினார்.
தொர்ந்து யாழ்ப்பாணத்தில் கறுத்தக் கொழும்பான் மாம்பழம் எங்கே வாங்கலாம் என்று எம்.பிக்கள் அரச அதிபரிடம் கேட்டனர். அத்துடன் நெல்லிரசம் எங்கே பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர்கள் கேட்டனர். அதன் பின்னர் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர் மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலில் திருநெல்வேலிச் சந்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு மாம்பழம், மற்றும் நெல்லிரசம் என்பன வாங்கிக் கொடுக்கப்பட்டன.
