பாம்பு தீண்டி பெண் ஒருவர் பலி!!
https://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_29.html
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் நேற்று இரவு பாம்பு தீண்டியதால் பெண்னொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு சமையல் அறையில் உறங்கிக்கொண்டிருந்த போது சமையலறை கதவில் உள்ள இடைவெளியூடாக வந்த பாம்பு தீண்டியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
தேற்றாத்தீவு வைத்தியர் வீதியை சேர்ந்த வசந்தி என்ற 30 வயது பெண்னே உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையை வைத்தியசாலை பணிப்பாளர் கு.சுகுணன் மேற்கொண்டார்.
இது தொடர்பிலான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
