ஆபாசப்படங்களுக்கு எதிராக வருகிறது கடுமையான சட்டம்

phone sex


ஆபாசப்படங்களை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்படவுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

ஆபாசப்படங்களை இறக்குமதி செய்தல், தயாரித்தல், ஒளிபரப்புதல், ஒலிபரப்புதல், அச்சிடுதல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கே இவ்வாறான சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

” இணையம் மற்றும் பல புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமானதில் இருந்து பாலியல் படங்களின் பாவனையும் அதிகரித்துள்ளது. இது சிறுவர்களையும் வெகுவாக பாதுத்துள்ளது.

சிறுவர்களை பாதுகாப்பதற்கும் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் கட்டுப்பாடற்ற அணுகுமுறையையும் கட்டுப்படுத்த இப்புதிய சட்டங்கள் உதவும் என்று நீதியமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார்.

சிறுவர் பாலியல்படங்கள் தயாரித்தல், விநியோகித்தல், ஒளிபரப்புதல், கணினியில் சேமித்தல், வெளிப்படுத்தல் ஆகிய குற்றங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் 10 வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தணடனையும் விதிக்கப்படும்

உத்தேச சட்டத்தின்படி ஆபாச படங்களிக்காக எவரையும் பணிக்கு அமர்த்துதல், அல்லது எவரினதும் சேவையை பெற்றுக்கொள்ளுதல் போன்ற குற்றங்களுக்கு 25,000 ரூபா அபராதமும், 10 வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் குற்றவாளியாக காணப்பட்டால் 20 வருடங்கள் வரையான சிறைத்தண்டனையும் ஐந்து லட்சம் ரூபாவுக்கு குறையாத அபராதமும் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item