8ம் தர மாணவர்களுக்கு இடையில் மோதல் - கல்லால் தாக்கியதில் ஒருவர் பலி!!



ரம்புக்கன்ன ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பராக்கிரம வித்தியாலயத்தில் 8ம் தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற வாய்தர்க்கம் மோதலில் சென்று முடிந்ததில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார்.
வாய்த்தர்க்கம் முற்றியதை அடுத்து ஒரு மாணவர் மற்றையவரை கல்லால் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான மாணவர் ரம்புக்கன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

எச்.ஜீ.தமின் மதுஷான் என்ற 13 வயது மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து ரம்புக்கன்ன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item