இணையதளங்களை செயல் இழக்கச் செய்யவல்ல DDOS தாக்குதல்கள் : ஒரு அறிமுகம்.

பொதுவாக நீங்கள் எல்லோரும் இவர்களை பற்றி அறிந்திருப்பீர்கள். அவர்கள்தான் துருவிகள் அலது ஊடறுப்பாளர்கள் .

பொதுவாக ஆங்கிலத்தில் Hackers என்று சொல்வோம். இணையதளங்கள் மற்றும் server களை ஊடறுத்து அவற்றின் தரவுகளை களவாடுதல், அழித்தல் , கப்பம் கோருதல் என்று பல வேலைகளை செய்வார்கள்.

தற்போது உங்களுக்கு நான் பாரியளவான server களையும் முடக்கிபோடும் DDOS Attacks பற்றி கொஞ்சம் சொல்லலாம் என்று நினைக்கிறன். DDOS என்பது Distributed Denial of Service attack என்பதை குறித்து நிற்கும். DDOS தாக்குதலுக்கு இலக்கான ஒரு வலையமைப்பின் நிலைமை எப்படி இருக்கும் என்ன சொல்கிறேன்.

உங்களிடம் ஒரு நேரத்தில் ஒருவர் ஒரு கேள்வி கேட்பதற்கும் அதே உங்களிடம் ஒரே நேரத்தில் நூறு பேர் நூறு கேள்விகளை கேட்பதற்கும் எவளவு வித்தியாசம் இருக்குமோ அது போலதான்.

வழக்கமாக நாள் ஒன்றிற்கு ஒரு லட்சம் பேர் போகும் தளம் ஒன்றிற்கு hacker தனது கணனியையும் அறிவையும் ( DDOS தாக்குதல்கள் எப்படி மேற்கொள்ள படுகின்றன அதற்கு என்ன தேவை என்பது பற்றி எனக்கு தெரியாது. ) பயன்படுத்தி அதே தளத்திற்கு ஒரு நேரத்தில் கோடிக்கணக்கான செயற்கை வாசகர்களை அனுப்புவான்.

அப்படிப்பட்ட செயற்கை வாசகர்களை Zombie bots என அழைப்பர். உடனேயே அதை தாக்குப்பிடிக்க முடியாமல் server குழம்பி அதை கதை முடிந்து விடும். இதுதான் DDOS தாக்குதல். இது பிரதானமாக மூன்று வகைப்படும் .

1. Bandwidth attack

2. Protocol attack

3. Logic attack

கீழுள்ள படத்தை பார்த்தல் புரியும் DDOS Attack எப்படி வேலை செய்கிறது என்று.



இவ்வாறான தாக்குதலை களை சமாளிக்கதான் DDOS Protection என்ற ஒரு விஷயம் இருக்கிறது. இந்த பாதுகாப்பின் மூலம் hackers அனுப்பும் செயற்கையான bots ஐ அது வடிகட்டிவிடும். கீழுள்ள படத்தை பார்த்தல் புரியும் DDOS Protection எப்படி வேலை செய்கிறது என்று.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item